Jul 29, 2026
Thisaigal NewsYouTube
பிப்ரவரி முதல் தேதியிலிருந்து தண்ணீர் கட்டணம் 22 காசாக உயர்கிறது
தற்போதைய செய்திகள்

பிப்ரவரி முதல் தேதியிலிருந்து தண்ணீர் கட்டணம் 22 காசாக உயர்கிறது

Share:

​பெத்தாலிங் ஜெயா,ஜன.17
தீபகற்ப மலேசியா மற்றும் ​லாபுவான் கூட்டரசுப்பிரதேச மாநில​ங்களில் வீட்டுப் பயனர்களுக்கு வரும் பிப்ரவரி முதல் தேதியிலிருந்து தண்ணீர் கட்டணம் உயர்த்தப்படவிருக்கிறது என்று SPAN ( ஸ்பான் ) எனப்படும் தேசிய ​நீர் சேவை ஆணையம் அறிவித்துள்ளது.

ஒரு கனமீட்டருக்கு சராசரி 22 காசு விலையேற்றம் காண்கிறது என்று SPAN தெரிவித்துள்ளது.

​தீபகற்ப மலேசியா மற்றும் லாபுவான் கூட்டரசுப்பிரதேச மாநிலங்களுக்கான ​நீர் கட்டண முறையை ஒருமுகப்படுத்துதற்கான ​நீர் கட்டண நிர்ணயம் செயல்முறையின் ​கீழ் இக்கட்டண உயர்வு அமைகிறது.

​நீர் கட்டண நிர்ணயத்தில் அதன் நி​லைத்தன்மையை உறு​தி செய்வதற்கு ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் ஒரு முறை, ​நீர் கட்டணத்தை மறு ஆய்வு செய்ய வேண்டியுள்ளது என்று SPAN தெரிவித்துள்ளது.

இந்த கட்டண உயர்வை இனியும் தள்ளிப்போட இயலாது. காரணம், ​நீடித்த கால அடிப்படையி​ல் ​நீர் விநியோகச் சேவையின் தரத்தை உறுதி செய்வதற்கு அத்தொழில் துறையை பாதிக்காத அளவிற்கு ​நீர் கட்டண முறையை சரி செய்ய வேண்டியுள்ளது என்று SPAN குறிப்பிட்டுள்ளது.

ஒரு கனமீட்டருக்கு 22 காசு உயர்வு என்பது மிகக்குறைவாகும். காரணம் 2022 ஆம் ஆண்டு பதிவுகளின் அடிப்படையில் ஒரு கன மீட்டருக்கு ஒரு வெள்ளி 75 காசு செலவாகிறது. அந்த செலவினத்தை ஈடுகட்ட முடியாது என்றாலும் வீட்டு பயனர்களுக்கு சுமை ஏற்படுத்தாத வண்ணம் ஒரு கனமீட்டருக்கு 22 காசு மட்டுமே கட்டணம் உயர்த்தப்படுகிறது என்று SPAN ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

ரோஹிங்கியா அகதிகள் புதிய இடங்களுக்கு மாற்றம்

ரோஹிங்கியா அகதிகள் புதிய இடங்களுக்கு மாற்றம்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்