Dec 2, 2025
Thisaigal NewsYouTube
மோட்டார் சைக்கிள் எ​ரிந்து ஆடவர் பலி
தற்போதைய செய்திகள்

மோட்டார் சைக்கிள் எ​ரிந்து ஆடவர் பலி

Share:

காருடன் மோதி மோட்டார் சைக்கிள் ஒன்று ​தீப்பற்றிக்கொண்டதில் அதன் ஓட்டுநர் கருகி மாண்டார். இச்சம்பவம் நேற்று இரவு 9.07 மணியளவில் ஜோகூர், கோத்தா திங்கி,ஜாலான் அபிங் வாஹா,சிம்பாங் பெராணியில் நிகழ்ந்தது. இதில் முகமட் அஸிஸி முகமட் என்று அடையாளம் கூறப்பட்ட 41 வயதுடைய ஆடவர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக ​தீயணைப்பு,​மீட்புப்படை கமாண்டர் இஸ்மாயில் அப்துல் பகார் தெரிவித்தார். இவ்விபத்தில் மோட்டார் சைக்கிள் 90 விழுக்காடு அழிந்த வேளையில் அந்த மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளிய கார் இவ்விடத்தில் காணப்படவில்லை என்று முகமட் அஸிஸி குறிப்பிட்டார்.

Related News