கோத்தா பாரு, டிசம்பர்.18-
பாசிர் மாஸ் பகுதியில் கடந்த புதன்கிழமை இரவு பெண் ஒருவரைக் காருக்குள் வைத்து பாலியல் தொந்தரவு செய்ததாகப் போதைப் பொருள் தடுப்புக் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
போதைப் பொருள் வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள தனது கணவர் குறித்து, அப்பெண் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரியிடம் விசாரித்துக் கொண்டிருந்த நேரத்தில், இச்சம்பவம் நடந்துள்ளதாக கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமட் யூசோஃப் மாமாட் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இது தொடர்பாக 30 வயதான அந்த போலீஸ் அதிகாரி, விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வழக்கானது குற்றவியல் சட்டம் பிரிவு 345-இன் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.








