குளுவாங், செப்டம்பர்.02-
கடந்த சனிக்கிழமை ஜோகூர், குளுவாங், சிம்பாங் ரெங்காம், தாமான் இம்பியான் 2 இல் வீடு புகுந்து களவாடிய நபர் ஒருவர், சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் பிடிட்டதாக குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பாஹ்ரேன் முகமட் நோ தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் கிடைக்கப் பெற்ற போலீஸ் புகாரைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட தீவிர தேடுதல் வேட்டையில் அன்றிரவு 10 மணியளவில் உள்ளூரை சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
சிம்பாங் ரெங்காம், தாமான் என்டி யாசின் என்ற இடத்தில் 35 வயது நபர் பிடிபட்டார். அந்த நபர், குற்றச்செயல்களுக்கான பழையப் பதிவுகள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்று ஏசிபி பாஹ்ரேன் தெரிவித்தார். விசாரணைக்கு ஏதுவாக அந்த நபரை மூன்று நாட்களுக்குத் தடுத்து வைப்பதற்கான ஆணையை நீதிமன்றத்திலிருந்து போலீசார் பெற்றுள்ளதாக அவர் மேலும் கூறினார்.








