Dec 4, 2025
Thisaigal NewsYouTube
மெய்க்காவலர்களுக்கு நிபுணத்துவ பயிற்சி அளிக்கப்படும்
தற்போதைய செய்திகள்

மெய்க்காவலர்களுக்கு நிபுணத்துவ பயிற்சி அளிக்கப்படும்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.02-

பேரா சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷா பங்கேற்ற தேசிய தினக் கொண்டாட்ட நிகழ்வில் பெண் ஒருவர் மேடையில் அத்துமீறி நுழைந்த சம்பவத்தைத் தொடர்ந்து அரசாங்கத் தலைவர்கள் மற்றும் விவிஐபி பிரமுகர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் அனைத்து அதிகாரிகளுக்கும், மெய்க்காவலர்களுக்கும் நிபுணத்துவப் பயிற்சி அளிக்கப்படும் என்று போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ காலிட் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

சுல்தான்கள், ஆளுநர்கள் உட்பட முக்கியப் பிரமுகர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியை ஏற்றுள்ள மெய்க்காவலர்கள் கமாண்டோ பயிற்சியின் கூறுகளை உள்ளடக்கிய தனிப்பட்ட பாதுகாப்புப் பயிற்சியைப் பெறுவர். பிரமுகர்களுக்கான பாதுகாப்புத் தரமும் மேம்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த அத்துமீறல் சம்பவத்தைத் தொடர்ந்து பேரா சுல்தானுக்கு பாதுகாப்பு அளிப்பதில் கவனக்குறைவாக இருந்ததாக நம்பப்படும் அதிகாரிகள், மெய்க்காவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருவதாக ஐஜிபி தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டுள்ள 41 வயதுடைய பெண், தற்போது குற்றவியல் சட்டம் 325 பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

Related News