Konsert Coldplay: Music Of The Spheres World Tour In Kuala Lumpur எனும் இசை நிகழ்ச்சி எந்தவித சர்ச்சை இல்லாமல் அமைதியான முறையில் வெற்றிகரமான நடந்தது.
இது குறித்து பேசிய தொடர்பு, இலக்கவியல் அமைச்சர் ஃபாமி ஃபட்சில் கூறுகயில், பிரிட்டனில் இருந்து வந்த அந்த இசைக் குழுவின் நிகழ்ச்சியி வெற்றியை எடுத்துக் காட்டாகக் கொண்டு நிகழ்ச்சிகளை சுமூகமாக நடத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
ஏற்பாட்டுக் குழுவினர், கலைஞர்கள், அதிகாரத்துவத்தினர் ஆகியோரின் ஒத்துழைப்பே இந்த வெற்றிக்குக் காரணமாக அமைந்தது எனத் தாம் கருதுவதாகக் கூறினார் ஃபாமி ஃபட்சில்.
தொடர்ந்து மலேசியாவில் வெளிநாட்டுக் கலைஞர்களின் இசை நிகழ்ச்சி நடக்க இருப்பதாலும். எந்த வித சிக்கலும் இருக்காது எனத் தாம் உறுதியாக நம்புவதாகவும் அவர் சொன்னார்.








