Sep 26, 2026
Thisaigal NewsYouTube
மடானி அரசாங்கத்தில் பூமிபுத்ரா கொள்கைகள் மிகவும் துணிச்சலாக முன்னெடுக்கப்படுகின்றன: பிரதமர் அன்வார் உறுதி
தற்போதைய செய்திகள்

மடானி அரசாங்கத்தில் பூமிபுத்ரா கொள்கைகள் மிகவும் துணிச்சலாக முன்னெடுக்கப்படுகின்றன: பிரதமர் அன்வார் உறுதி

Share:

கோலாலம்பூர், மே.03-

மடானி அரசாங்கத்தின் மூன்று ஆண்டு கால ஆட்சியில், பூமிபுத்ராக்களின் உரிமைகளையும் நலன்களையும் முன்னெப்போதையும் விட மிகவும் உறுதியாகவும் துணிச்சலாகவும் பாதுகாக்கப்பட்டு வருவதாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். கோலாலம்பூரில் நடைபெற்ற 'மாரா' அமைப்பின் 60-வது ஆண்டு விழாவில் உரையாற்றிய அவர், தனது அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தினரை மட்டும் ஆதரிப்பதாகக் கூறப்படும் கருத்துகளை மறுத்ததுடன், பூமிபுத்ராக்களின் நலன்களைப் புறக்கணிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

கல்வித் துறையில் தகுதி அடிப்படையில் 10A எடுத்த அனைத்து மாணவர்களுக்கும் பல்கலைக்கழக இடங்கள் வழங்கப்பட்டாலும், மெட்ரிகுலேஷன் திட்டத்தில் பூமிபுத்ராக்களுக்கான 90 விழுக்காடு இட ஒதுக்கீடு தொடர்ந்து உறுதிச் செய்யப்படுவதைப் பிரதமர் சுட்டிக் காட்டினார். கல்வி ஒதுக்கீடு குறித்து சில தரப்பினர் தவறான கருத்துகளைப் பரப்புவதைச் சாடிய அவர், அரசாங்கத்தின் கொள்கைகளை முழுமையாகப் புரிந்து கொள்ளுமாறும், நாட்டு மக்களின் ஒற்றுமையைக் குலைக்கும் வகையிலான விவாதங்களைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொண்டார்.

Related News