தாம் போட்டியிட்ட செகாமாட் நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் முடிவு செல்லாது என்று அறிவிக்கக் கோரி தொடுக்கப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்திருக்கும் மூவார் தேர்தல் நீதிமன்ற முடிவை எதிர்த்து, பிரபல தொழில் அதிபரும், ம.இ.கா. வின் தேசிய பொருளாருமான டான் ஶ்ரீ எம். ராமசாமி கூட்டரசு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.
இத்தேர்தலில் செகாமாட் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வுச் செய்யப்பட்டுள்ள பிகெஆர் வேட்பாளர் ஆர்.யுவனேஸ்வரனின் வெற்றியை ரத்து செய்யக் கோரி, ராமசாமி இவ்வழக்கைத் தொடுத்திருந்தார்.
வாக்காளர்களுக்கு விருந்து உபசரிப்பு நடத்தி, வாக்கு வேட்டை நடத்தப்பட்டதாகவும், இதன் மூலம் தேர்தல் விதிமுறைகளை யுவனேஸ்வரன் மீறியுள்ளதாகவும் ராமசாமி தமது வழக்கு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
அவரின் வழக்கு மனுவை விசாரணை செய்த மூவார் நீதிமன்றம், செலவுத் தொகையுடன் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, அம்முடிவை எதிர்த்து ராமசாமி மேல் முறையீடு செய்துள்ளார்.

Related News

ஜித்ரா டோல் சாவடி விபத்து: இளம் ஜோடியின் சொந்த ஊர் பயணம் சோகத்தில் முடிந்தது

மலாய் மொழியை ஏற்காதவர்கள் மலேசியாவில் வசிக்க வேண்டாம் - மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அதிரடி

நஜிப் ரசாக் - தோம்மி தோமஸ் இடையிலான அவதூறு வழக்கு சமரசத்தில் முடிந்தது

ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்திற்கு புதிய தளம் தயார்: சமய நல்லிணக்கத்தைப் பேண அரசாங்கம் உறுதி

ரேபிட் ஆன்-டிமாண்ட் (Rapid On-Demand ) வேன் சேவைக்கான புதிய கட்டண முறை அறிவிக்கப்பட்டுள்ளது


