Aug 2, 2026
Thisaigal NewsYouTube
பெண் குழந்தையின் உடல் Queensbay கடலில் மீட்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

பெண் குழந்தையின் உடல் Queensbay கடலில் மீட்கப்பட்டது

Share:

பினாங்கு, பாயான் பாரு, Queensbay கடற்கரையில் நேற்று மாலையில் பெண் குழந்தை ஒன்றின் உடல் கரை ஒதுங்கிய நிலையில் கண்டு பிடிக்கப்பட்டது, பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மாலை 5:55 மணியளவில் கிடைக்கப்பெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து அவ்விடத்திற்கு போ​லீசார் விரைந்ததாக பினாங்கு மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கமாருல் ரிசால் ஜெனால் கூறினார்.

அப்பெண் குழந்தையின் உடல் வேறொரு இடத்திலிருந்து கடல் அலையினால் அடித்து வரப்பட்டிருக்கலாம் என்றும், குழந்தையின் உடலில் ஆடை ஏதுமில்லை என்றும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக ஏசிபி கமாருல் ரிசால் அறிவித்தார்.

மருத்துவ பரிசோதனைக்காக குழந்தையின் உடல், பினாங்கு மரு​த்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து குற்றவியல் சட்டம் 318 ஆவது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஏசிபி கமாருல் ரிசால் தெரிவித்தார்.

Related News

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்

ஜார்ஜ் டவுனில் பரபரப்பு: பழுது பார்க்கும் பணியின் போது கட்டடக் கூரை இடிந்து விழுந்து விபத்து

ஜார்ஜ் டவுனில் பரபரப்பு: பழுது பார்க்கும் பணியின் போது கட்டடக் கூரை இடிந்து விழுந்து விபத்து

சுங்கை பூலோ அருகே பயங்கரம்: கன்டெய்னர் லாரி விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிய ஓட்டுநர் மீட்பு

சுங்கை பூலோ அருகே பயங்கரம்: கன்டெய்னர் லாரி விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிய ஓட்டுநர் மீட்பு

அரசு நிலங்களை சட்டவிரோத ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்க வேண்டும்: பகாங் சுல்தான் அதிரடி உத்தரவு

அரசு நிலங்களை சட்டவிரோத ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்க வேண்டும்: பகாங் சுல்தான் அதிரடி உத்தரவு