Apr 2, 2026
Thisaigal NewsYouTube
வெ.3 மில்லியன் செலவில் பீடோரில் நவீன மின்சுடலை – டத்தோ சிவநேசன் தகவல்
தற்போதைய செய்திகள்

வெ.3 மில்லியன் செலவில் பீடோரில் நவீன மின்சுடலை – டத்தோ சிவநேசன் தகவல்

Share:

பேராக், பீடோரில் முஸ்லிம் அல்லாதவர்களின் நீண்டக்காலக் கோரிக்கையான நவீன மின்சுடலை பிரச்னைக்குத் மாநில மனிதவளம்,சுகாதாரம்,தேசிய ஒருமைப்பாடு மற்றும் முஸ்லிம் அல்லாதவர் பிரிவுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ.சிவநேசன் தலைமையில் தீர்வுகாணப்பட்டது.

வடக்கு – தெற்கு நெடுஞ்சாலையிலிருந்து சுமார் 10 நிமிடப் பயணத்தூரத்தில் பீடோரில் 1.3 ஏக்கர் நிலத்தில் 3 மில்லியன் ரிங்கிட் செலவில் நவீன மின்சுடலை அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா நேற்று காலையில் டத்தோ சிவநேசன் தலைமையில் நடந்தேறியதன் வாயிலாக இவ்வட்டார மக்களின் நீண்டக்கால கோரிக்கைக்கு விடியல் பிறந்துள்ளது. .

முஸ்லிம் அல்லாதவர்களுக்காக உருவாக்கப்படும் இந்த நவீன மின்சுடலையின் கட்டுமானப்பணி அடுத்த ஐந்து மாதங்களில் நிறைவு பெறும் எனவும் நடப்பு சூழலில் 2 எரியூட்டும் அடுப்புகளுடன் உருவாக்கப்படும் இந்த மின்சுடலையில் பிறகு மூன்றாவது எரியூட்டும் அடுப்பும் இணைக்கப்படும் என்று டத்தோ சிவநேசன் குறிப்பிட்டார்.

"பீடோரில் நவீன மின்சுடலை அமையவிருப்பது இப்பகுதி மக்களுக்கு முக்கிய தேவையாகும். இதன் மூலம் தஞ்சோங் மாலிம் முதல் தாப்பா வரையிலான மக்கள் மட்டுமின்றி, சிலாங்கூர் மாநிலத்தின் உலுபெர்ணம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதி மக்களும் பயனடைவார்கள் என்று டத்தோ சிவநேசன் தெரிவித்தார்.

இதன் அடிக்கல் நாட்டு விழாவில் சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், சீனப் பிரதிநிதிகள், இந்து சங்கப் பொறுப்பாளர்கள், ஆலய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பல இனத்தைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.

Related News

கிள்ளான் ரோட்டரி கிளப் ஏற்பாடு: பேரிடர் நிவாரண நிதி வழங்கியவர்களுக்கு பாராட்டு விழா

கிள்ளான் ரோட்டரி கிளப் ஏற்பாடு: பேரிடர் நிவாரண நிதி வழங்கியவர்களுக்கு பாராட்டு விழா

பெந்தோங்கில் மாயமான இந்தியக் குடும்பம் மீட்பு: குடும்பத் தகராறே காரணம் என போலீஸ் தகவல்

பெந்தோங்கில் மாயமான இந்தியக் குடும்பம் மீட்பு: குடும்பத் தகராறே காரணம் என போலீஸ் தகவல்

கார்ப்பரேட் குற்றங்கள்’ புதிய அச்சுறுத்தல்; ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் எச்சரிக்கை

கார்ப்பரேட் குற்றங்கள்’ புதிய அச்சுறுத்தல்; ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் எச்சரிக்கை

சிறுமிகளிடம் அநாகரீகமாக நடந்த 54 வயது நபர் கைது

சிறுமிகளிடம் அநாகரீகமாக நடந்த 54 வயது நபர் கைது

ஆர்ட்டெமிஸ் 2 விண்ணில் பாய்ந்தது: 54 ஆண்டுகளுக்கு பின் நிலவுக்குச் செல்லும் 4 மனிதர்கள்

ஆர்ட்டெமிஸ் 2 விண்ணில் பாய்ந்தது: 54 ஆண்டுகளுக்கு பின் நிலவுக்குச் செல்லும் 4 மனிதர்கள்

சர்வதேச விவகாரங்களில் சட்டத்தின் ஆட்சி பலவீனப்படுத்தப்படுகின்றது / வலுவானவர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகிறார்கள் / பிரதமர் அன்வார் எச்சரிக்கை

சர்வதேச விவகாரங்களில் சட்டத்தின் ஆட்சி பலவீனப்படுத்தப்படுகின்றது / வலுவானவர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகிறார்கள் / பிரதமர் அன்வார் எச்சரிக்கை