Jul 1, 2026
Thisaigal NewsYouTube
 Guru Bitara Nadi Negara " - இந்த ஆண்டு ஆசிரியர் தினக் கருப்பொருள் அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

Guru Bitara Nadi Negara " - இந்த ஆண்டு ஆசிரியர் தினக் கருப்பொருள் அறிவிப்பு

Share:

இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தினக் கருப்பொருளாக "Guru Bitara Nadi Negara” என்பதை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக விளங்கும் ஆசிரியர் பணியை வலுப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

இது குறித்துப் பேசிய கல்வித் துணை அமைச்சர் வோங் கா வோ, " Guru Bitara Nadi Negara " என்பது வெறும் பாடத்திட்டத்தை முடிப்பது மட்டுமல்லாமல், மாணவர்களின் தனித்திறமைகளைக் கண்டறிந்து அவர்களை வருங்காலத் தலைவர்களாக உருவாக்குவதாகும் என்றார்.

அறிவாற்றல், விமர்சன சிந்தனை மற்றும் நற்பண்புகள் கொண்ட ஆசிரியர்களை உருவாக்குவதே தற்போதைய முன்னுரிமை என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், இந்த ஆண்டுக்கான தேசிய அளவிலான ஆசிரியர் தினக் கொண்டாட்டங்கள் வரும் மே 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் பேராக் மாநிலத்தில் நடைபெறும் என்றும், அடுத்த ஆண்டு நெகிரி செம்பிலான் மாநிலம் இக்கொண்டாட்டத்தை நடத்தும் என்றும் வோங் கா வோ தெரிவித்தார்.

Related News