ஷா ஆலாம், டிசம்பர்.02-
கிள்ளான், கம்போங் ஜாவாவில் வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை எவ்வித விரும்பத்தகாத சம்பவமின்றி சுமூகமாக நடைபெற்றதாக சிலாங்வர் மாநில போலீஸ் தலைவர் சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷாஸெலி கஹார் தெரிவித்தார்.
சிலாங்கூர், பந்திங்கையும், பேரா தைப்பிங்கையும் இணைக்கும் மேற்குக் கரையோர விரைவு நெடுஞ்சாலைத் திட்டமான WCE-யின் மூன்றவாது பிரிவுக்கான கட்டுமானப் பணிகளுக்கு வழிவிடும் வகையில் கம்போங் ஜாவா குடியிருப்புகள் உடைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
பொது அமைதியை நிலை நாட்டும் வகையில் போதுமான போலீஸ் பலத்துடன் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இந்த வீடுகள் உடைப்புக்கு உள்ளூர் மக்களும் போலீசாருக்கு மிகுந்த ஒத்துழைப்பு நல்கியதாக டத்தோ ஷாஸெலி கஹார் தெரிவித்தார்.








