சுங்கை பட்டாணி, ஜாலான் லுபுக் செகிந்தா-லுபுக் காவா பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, ஆற்றில் கவிழ்ந்ததில், 77 வயது மாட் யுசோஃப் ஹாஷிம் நீரில் மூழ்கினார்.
இந்நிலையில், இன்று காலை 9.15 மணியளவில் அவரது உடலானது ஆற்றிலிருந்து மீட்கப்பட்டது.
முதலில், காரானது மீட்கப்பட்ட போது, உடல் கிடைக்காத நிலையில், பின்னர் கார் இருந்த இடத்திலிருந்து சுமார் 50 முதல் 100 மீட்டர் தொலைவில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
இந்நிலையில், மீட்கப்பட்ட உடலானது பிரேதப் பரிசோதனைக்காக அலோர் ஸ்டார் சுல்தானா பஹியா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக, கோலா மூடா மாவட்ட போலீஸ் தலைவர் ஹன்யான் தெரிவித்துள்ளார்.








