Dec 2, 2025
Thisaigal NewsYouTube
ஓப் தாபிஸ் சோதனையில் தெத்தோம் இலைகள் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

ஓப் தாபிஸ் சோதனையில் தெத்தோம் இலைகள் பறிமுதல்

Share:

ஓப் தாபிஸ் சோதனையில், மூவாயிரத்து ஐநூற்று 50 வெள்ளி மதிப்புள்ள தெத்தோம் இலைகள் மற்றும் தண்ணீர்களை போலீசார் கைப்பற்றிருப்பத்தாக கூலிம் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் ரிட்சுவான் பின் சாலே தெரிவித்தார் .

கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி மாலை 6.30 மணியளவில் கூலிம், கம்போங் பாலே, புக்கிட் லுனாஸ்சில் உள்ள ஒரு செம்பனை தோட்டத்தில் நடத்தப்பட்ட இந்த ஓப் தாபிஸ் சோதனையில், எண் பலகையில்லாத கூடாரத்திற்குள், 330 பொட்டலங்களில் ஒரு லட்சத்து 65 ஆயிரம் லீட்டர் கெத்தோம் தண்ணீரும், 38 பைகளில் 190 கிலோ கிராம் கெத்தோம் இலைகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும், இக்குற்றச்செயலில் ஈடுப்பட்டதாக நம்பப்படும் உள்நாட்டைச் சேர்ந்த 27 மற்றும் 39 வயதுடைய இரு ஆடவர்களையும் போலீசார் கைதுசெய்துள்ளனர்.

Related News