Oct 9, 2026
Thisaigal NewsYouTube

பிரிக்பீல்ட்ஸில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – ஐவர் கைது!

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பிரிக்பீல்ட்ஸில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – ஐவர் கைது!

பிரிக்பீல்ட்ஸ், ஜூன்.22-

கடந்த ஜூன் 13ஆம் நாள், பிரிக்பீல்ட்ஸில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் பலியாகி, இருவர் காயமடைந்த வழக்கில், காவல்துறையினர் ஐந்து பேரைக் கைது செய்து விசாரித்த பிறகு ஜாமீனில் விடுவித்தனர். இந்தக் கைதுகள் ஜூன் 16 ஆம் தேதி தலைநகரைச் சுற்றி மேற்கொள்ளப்பட்டன.

இஃது ஒரு சட்டவிரோதக் கும்பல் மோதல் காரணமாக நடந்ததாகக் கருதப்படும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் என்றும், இதற்கு 18 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் கோலாலம்பூர் காவல்துறை துணைத் தலைவர் முகம்ட் உசுஃப் ஜான் முகமட் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →