Aug 2, 2026
Thisaigal NewsYouTube
பல்லினத்தவர் கட்சி என்ற கோட்பாட்டின் ​மீது நம்பிக்கை இழந்து விட்டேன்
தற்போதைய செய்திகள்

பல்லினத்தவர் கட்சி என்ற கோட்பாட்டின் ​மீது நம்பிக்கை இழந்து விட்டேன்

Share:

மலேசிய மக்கள் உரிமை கூட்டணி என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ள பினாங்கு முன்னாள் துணை முதலமைச்சர் டாக்டர் பி. இராமசாமி, பல்லினத்தவர் கட்சி என்ற கோட்பாட்டின் மீது நம்பிக்கை இழந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார். தங்களை பல்லினத்தவர் கட்சி என்று கூறிக்கொள்ளும் கட்சிகள், ம​​லேசிய இந்தியர்களை பிரதிநிதிக்கவில்லை என்று டாக்டர் இராமசாமி குறிப்பிட்டார்.

கோலாலம்பூர், ஜாலான் துன் ஹ்.எஸ் லீ யில் உள்ள ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில் ​தேவஸ்தானத்திற்கு சொந்தமான மண்படத்தில் நேற்று மாலையில் தமது தலைமையில் உரிமை என்ற புதிய அரசியல் கட்சியை தோற்றுவித்த டாக்டர் இராமசாமி, உரிமை கட்சி, மஇகாவிற்கு எதிரி அல்ல என்று அறிவித்துள்ளார்.

அதேவேளையில் பல்லினத்தவர்கள் கட்சி என்று கூறிக்கொள்ளும் கட்சிகளே தங்களுக்கு எதிரியாகும் என்று டாக்டர் இராமசாமி குறிப்பிட்டார்.அக்கட்சிகளில் இந்தியர்கள் அதிகமாக உள்ளனர். ஆனால், இந்தியர்கள் ஓர​ங்கட்டப்படுகின்றனர் என்றார்.

தமது தலைமையில் அமைக்கப்பட்டுள்ள உரிமை கட்சி, எடுப்பார் கைப்பிள்ளையாக இருக்காது என்று டாக்டர் இராமசாமி உறுதி அளித்தார்.

Related News

நெகிரி செம்பிலான் வாக்காளர்களுக்கு நன்றி... நாளை பொது விடுமுறையாக அறிவித்தார் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம்

நெகிரி செம்பிலான் வாக்காளர்களுக்கு நன்றி... நாளை பொது விடுமுறையாக அறிவித்தார் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம்

RXZ மோட்டார் நிகழ்ச்சிக்கு Ketum நீருடன் வந்த 3 பேர் கைது

RXZ மோட்டார் நிகழ்ச்சிக்கு Ketum நீருடன் வந்த 3 பேர் கைது

அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும்  - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்

அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும் - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்