Oct 10, 2026
Thisaigal NewsYouTube

எதிர்க்கட்சித் தலைவரின் மாமியார் தீயில் உயிரிழந்தார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
எதிர்க்கட்சித் தலைவரின் மாமியார் தீயில் உயிரிழந்தார்

ஈப்போ, ஜூன்.20-

மூதாட்டியும், எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ ஹம்ஸா ஸைனுடினின் மாமியாருமான 84 வயதுடைய பெண்மணி நேற்றிரவு நிகழ்ந்த தீ விபத்தில் உயிரிழந்தார்.

இச்சம்பவம் நேற்று இரவு ஈப்போ, ஜாலான் ராஜா அப்துல்லா, கம்போங் சுங்கை ராபாட் தம்பாஹானில் உள்ள இரண்டு மாடி தரை வீட்டில் நிகழ்ந்தது.

இதில் சல்மியா ந்யாக்மாட் என்ற மூதாட்டி உயிரிழந்த வேளையில் அவரின் கணவர் அப்துல் கானி ங்கா, தீக்காயங்களுக்கு ஆளாகி ஈப்போ, ராஜா பெரும்புவான் மைனுன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இறந்த மூதாட்டி, லாருட் நாடாளுமன்ற உறுப்பினர் ஹம்ஸா ஸைனுடினின் மாமியார் என்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தீ விபத்து தொடர்பில் போலீசார் நேற்றிரவு 9.19 மணியளவில் அவசர அழைப்பைப் பெற்றதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அபாங் ஸைனால் அபிடின் அபாங் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →