Jan 21, 2026
Thisaigal NewsYouTube
ஆற்றல் மாற்றத்தின் இலக்கு குறித்த திட்டம் இவ்வாண்டு தொடங்கப்படும்
தற்போதைய செய்திகள்

ஆற்றல் மாற்றத்தின் இலக்கு குறித்த திட்டம் இவ்வாண்டு தொடங்கப்படும்

Share:

நாட்டின் எரிசக்தி மாற்ற முயற்சிகளை விரைவுபடுத்துவதற்கான விரிவான உத்திகள் மற்றும் உயர் தாக்க முயற்சிகளை கோடிட்டுக் காட்டும் NETR எனப்படும் தேசிய ஆற்றல் மாற்றத்தின் இலக்கு மற்றும் HETR எனப்படும் ஹைட்ரஜன் தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார இலக்கு ஆகியவை இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் தொடங்க உள்ளன என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

12வது மலேசியத் திட்டம் மற்றும் 2021 ஆம் ஆண்டு முதல் 2040 ஆம் ஆண்டு வரைக்குமான தேசிய எரிசக்திக் கொள்கை ஆகியவற்றில் உள்ள தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்பின் இலக்கை அடைவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதி இது என்று பிரதமர் அன்வார் தெரிவித்தார்.

இந்தத் திட்டம் எதிர்காலத்தில் ஆற்றல் துறைக்கான முன்னோக்கி செல்லும் வழியை மூலோபாய ரீதியாக வரைபடமாக்கும் மற்றும் சமூக-பொருளாதார மேம்பாட்டில் முக்கிய ஊக்கியாக அத்துறையை நிலைநிறுத்துவதோடு, 2040 ஆம் ஆண்டில் குறைந்த கார்பல் என்ற திட்டத்திற்கு பெரும் உதவியாகத் திகழும் என்று பிரதமர் அன்வார் விளக்கமளித்துள்ளார்.

இந்தக் கொள்கையை வெற்றிகரமாகச் செயல்படுத்த, நாட்டிற்கு முக்கியமான சமூக பொருளாதார முன்னேற்றத்தின் முழுப் பயனையும் அடைவதற்கு, அரசாங்கம் பல திட்டங்களை உருவாக்கி வருகிறது என்றும், அதில் மிக முக்கியமானது NETR என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

Related News

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை

ஜோகூர் இளைஞர்களுக்குப் பெரும் வாய்ப்பு: திறன் மேம்பாட்டிற்காக 116.22 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு

ஜோகூர் இளைஞர்களுக்குப் பெரும் வாய்ப்பு: திறன் மேம்பாட்டிற்காக 116.22 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு