Aug 6, 2026
Thisaigal NewsYouTube
அஸர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதா?
தற்போதைய செய்திகள்

அஸர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதா?

Share:

அஸ்தானா, டிச. 26-

கஸக்ஸ்தானில் அக்தாவ் அனைத்துலக விமான நிலையத்தின் அருகில் அஸர்பைஜான் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் விபத்துக்குள்ளானதற்கு அவ்விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு இருக்கலாம் என்று ஆருடம் கூறப்பட்டு வருகிறது.

எம்பரர் 190 ரகத்திலான அஸர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானத்தின் உடைந்த பாகத்தில் துவாரம் ஒன்று காணப்பட்டு இருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துவதாக உள்ளன என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேற்காசிய நாடான முன்னாள் சோவியத் குடியரசின் கஸக்ஸ்தானில் நேற்று புதன்கிழமை நிகழ்ந்த இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 67 பேரில் 38 பேர் மாண்டனர்.

ரஷ்யாவின் குரோன்ஸி நகருக்குச் சென்றுகொண்டிருந்த விமானம் திசைமாறிக் கஸக்ஸ்தானில் விபத்துக்குள்ளானது.

விமானம் வழக்கமான பாதையை விட்டு ஏன் வெகுதூரம் சென்றது என்பதைப் புலனாய்வு அதிகாரிகள் ஆராய்ந்துவருகின்றனர்.

மோசமான வானிலையால் விமானம் திசை மாறியிருக்கலாம் என்ற தகவல் கிடைத்ததாக அஸர்பைஜான் அதிபர் இல்ஹம் அலியெவ் கூறினார்.

Related News

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம்  ஆலோசனை

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம் ஆலோசனை

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

கங்காரில் தொடரும் மர்மம்: அடுத்தடுத்து சாக்கு மூட்டையில் கண்டறியப்படும் மனித எலும்புகள்

கங்காரில் தொடரும் மர்மம்: அடுத்தடுத்து சாக்கு மூட்டையில் கண்டறியப்படும் மனித எலும்புகள்

 ஃபார்முலா 1 போட்டிக்குத் தயாராகும் மலேசியா – சிங்கப்பூர் அனுபவங்களைக் கேட்டறிந்த பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 போட்டிக்குத் தயாராகும் மலேசியா – சிங்கப்பூர் அனுபவங்களைக் கேட்டறிந்த பிரதமர் அன்வார்

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு