Dec 4, 2025
Thisaigal NewsYouTube
மலேசிய நிறுவனங்களுக்கு எதிராக தாக்குதலா?
தற்போதைய செய்திகள்

மலேசிய நிறுவனங்களுக்கு எதிராக தாக்குதலா?

Share:

இஸ்ரேலுக்கு ஆதரவான இணையத்தள சதிக்கும்பல்கள், மலேசியாவின் பொருளாதார மையங்களுக்கு எதிராக சைபர் தாக்குதலை நடத்தலாம் என்று மத்திய பொருளகமான பேங்க் நெகாரா எச்சரித்துள்ளது.

அதேவேளையில் இந்த தாக்குதலை முறியடிப்பதற்கு சைபர் மிரட்டல் உளவுப் பிரிவின் மூலம் இதற்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன என்று பேங்க் நெகாரா அறிவித்துள்ளது.

குறிப்பாக நிதி நிறுவனங்கள் மற்றும் அவர்களின் கூட்டு நிறுவனங்கள் தொடர்பான எல்லாத் தொடர்புகளும் மிக தீவிராக கண்காணிக்கப்பட்டு வருவதாக அது தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் – காஸா சண்டையின் எதிரொலியாக இந்த கும்பல் இத்தகைய சைபர் தாக்குதலை நடத்தும் சாத்தியங்களுக்கு எதிராக பாதுகாப்பு பணிகள் முடுக்கிவிடுப்பட்டுள்ளதாக பேங்க் நெகாரா குறிப்பிட்டுள்ளது.

Related News