Dec 3, 2025
Thisaigal NewsYouTube
தோட்டத் தொழிலில் சர்ச்சையில் நல்ல தீர்வு
தற்போதைய செய்திகள்

தோட்டத் தொழிலில் சர்ச்சையில் நல்ல தீர்வு

Share:

தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் / தோட்ட முதலாளிமார்கள் சங்கமான மாப்பா (மாபா ) மீது தொடுத்துள்ள தொழிலியல் நீதிமன்றம் வழக்கில் ஒரு நல்ல தீர்க்கமான முடிவு அறிவிக்கப்படும் என்று கெடா மாநில தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் மாநில செயலாளர் ஜ.சந்தனதாஸ் நம்பிக்கை தெரிவித்தார்.

தற்போது தோட்டத்தில் வேலை செய்து வரும் தோட்டத் தொழிலாளர்கள் தங்களின் மாத வருமானம் குறைவாக இருக்கின்ற காரணத்தினால் எப்போது சம்பளம் உயர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.

இந்நிலையில் பத்து லிந்தாங் தோட்டத் தொழிலாளர்களை சந்திக்கும் வகையில் பத்து லிந்தாங் தோட்ட கிளப் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்புக் கூட்டத்தில் இது குறித்து முழுமையாக விளக்கம் தரப்பட்டதாக சந்தனதாஸ் தெரிவித்தார்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் டத்தோ ஜி.சங்கரன் முன்னெடுத்து வரும் திட்டங்கள் குறித்தும், 130 தொழிலாளர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டதாக சந்தனதாஸ் குறிப்பிட்டார்.

இவ்விளக்கத்தை கேட்டறிந்த தோட்டத் தொழிலாளர்கள் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஆதரவு வழங்குவதாக உறுதி அளித்தனர்.
மேலும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் காப்புறுதி கட்டணம் தொடர்பில் அவர்களுக்கு கிடைக்கக்கூடிய அனுகூலம் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டதாக சந்தனதாஸ் விளக்கினார்.

இந்த கூட்டத்தில் கெடா மாநில தலைவர் கே.கணேசன், நிதி செயலாளர் எஸ்.நேமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related News