Jun 6, 2026
Thisaigal NewsYouTube
ஹம்சா சைனுடீனுக்கு 2 லட்சம் உறுப்பினர்கள் ஆதரவா? - மலாக்கா பெர்சாத்து மறுப்பு
தற்போதைய செய்திகள்

ஹம்சா சைனுடீனுக்கு 2 லட்சம் உறுப்பினர்கள் ஆதரவா? - மலாக்கா பெர்சாத்து மறுப்பு

Share:

பெர்சாத்து கட்சியின் நடப்பு மற்றும் முன்னாள் உறுப்பினர்களில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர், அக்கட்சியின் முன்னாள் துணைத்தலைவர் ஹம்சா ஜைனுடின் முன்னெடுத்து வரும் “ரீசெட்” இயக்கத்துக்கு ஆதரவு அளித்து வருவதாக கூறப்பட்டுள்ள தகவலை, மலாக்கா மாநில பெர்சாத்து கட்சி மறுத்துள்ளது.

இது குறித்து மலாக்கா மாநில பெர்சாத்து தகவல் பிரிவு தலைவர் ஹிஷாமுடின் அப்துல் கரீம் வெளியிட்டுள்ள தகவலில், மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ரஹீம் தம்பி சிக் வெளியிட்ட இந்தக் கூற்று உண்மை நிலவரத்திற்கு முற்றிலும் நேர் எதிரானது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தேசிய அரசியலில் தொடர்ந்து முக்கியத்துவம் பெற ரஹீம் தம்பி சிக் எடுக்கும் அவசரமான அரசியல் முயற்சிகளில் இதுவும் ஒன்று என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

முன்னதாக, ரஹீம் தம்பி சிக் வெளியிட்டிருந்த தகவலில், பெர்சாத்து கட்சி மீதான நம்பிக்கை இழப்பு காரணமாக சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான பெர்சாத்து உறுப்பினர்கள் ஹம்சா ஜைனுடினுக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ  ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

 14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு

14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு

ஹம்சா சைனுடீனுக்கு 2 லட்சம் உறுப்பினர்கள் ஆதரவா? - மலாக்க... | Thisaigal News