பாங்கி பகுதியில் நேற்று இரவு போலீசாருக்கும், பல கொள்ளைச் சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என நம்பப்படும் இரு சந்தேக நபர்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில், அவ்விருவரும் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இது குறித்து புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறை சிஐடி இயக்குநர் எம் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த துப்பாக்கிச் சூடு சம்பவமானது நேற்று இரவு சுமார் 9.10 மணியளவில் பண்டார் ஸ்ரீ புத்ரா பகுதியில் உள்ள ஜாலான் பெர்சியாரான் ஸ்ரீ புத்ரா 2 சாலையில் நடந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
சுட்டுக் கொல்லப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிகளில் நடந்த பல கொள்ளைச் சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என நம்பப்படுகின்றது.
இது குறித்த விரிவான தகவல்களை இன்று நடைபெறவுள்ள செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவிப்பதாக எம் குமார் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.








