Jul 31, 2026
Thisaigal NewsYouTube
திருநங்கைகளுக்கு எதிராக சோதனை நடவடிக்கையா?
தற்போதைய செய்திகள்

திருநங்கைகளுக்கு எதிராக சோதனை நடவடிக்கையா?

Share:

அண்மையில் ஈப்போவில் “Op Cegah Pondan” என்ற பெயரில் ஷரியா சட்டத்தின் கீழ் ஐந்து திருநங்கைகள் கைது செய்யப்பட்ட நடவடிக்கையை Justice for Sisters அமைப்பு சாடியுள்ளது.

இந்த சோதனை நடவடிக்கைக்கு மேற்கண்ட தலைப்பில் பெயரிடப்பட்டு இருப்பது கண்டிக்கத்தக்க செயலாகும். திருநங்கைகளின் மன உணர்வையும், அவர்களின் எண்ணத் தாபங்களையும் சிறிதும் பொருட்படுத்தாமல் அவர்களை சிறுமைப்படுத்தும் வகையில் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று Justice for Sisters அமைப்பின் தோற்றுநர் திலகா சுலாத்திரெ தெரிவித்துள்ளார்.

திருநங்கைகளின் பாலியல் தன்மை குறித்து அறிவியல் ரீதியாக நிறைய ஆதாரங்களும், தரவுகளும் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பது, குற்றஞ்சாட்டுவது அல்லது விரட்டியடிப்பது ஏற்புடைய செயல் அல்ல என்று திலகா சுலாத்திரெ வாதிட்டார்.

Related News