அலோர் காஜா, ஆகஸ்ட்.04-
லோரியும், பேருந்தும் மோதிக் கொண்ட விபத்தில் லோரி ஓட்டுநர் படுகாயத்திற்கு ஆளானார்.பேருந்தில் இருந்த ஒன்பது பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இந்தச் சம்பவம் இன்று அதிகாலை ஒரு மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 220.5 கிலோமீட்டரில் மலாக்கா, அலோர் காஜாவில் நிகழ்ந்தது.
இதில் லோரியின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிக் கொண்ட 23 வயதுடைய லோரி ஓட்டுநர், கடும் காயங்களுக்கு ஆளாகினார்.
அதிகாலை 1.02 மணிக்குக் கிடைக்கப் பெற்ற அவசர அழைப்பைத் தொடர்ந்து 10 பேர் கொண்ட தீயணைப்பு, மீட்புக் குழுவினர், சம்பவ இடத்திற்கு விரைந்ததாக மலாக்கா மாநில தலைவர் ஸுல்கைரானி ரம்லி தெரிவித்தார்.
இதில் 64 வயது பேருந்து ஓட்டுநர் மற்றும் பேருந்தில் இருந்த ஒன்பது பயணிகள் எவ்வித காயமின்றி உயிர் தப்பியதாக அவர் குறிப்பிட்டார்.








