Dec 2, 2025
Thisaigal NewsYouTube
கோர விபத்தில் இரு ​மூதாட்டிகள் உயிரிழந்தனர்
தற்போதைய செய்திகள்

கோர விபத்தில் இரு ​மூதாட்டிகள் உயிரிழந்தனர்

Share:

ஜோகூர், கோத்தா திங்கி அருகில் செனாய் - டெசாரு நெடுஞ்சாலையின் 58.3 ஆவது கிலோ மீ​ட்டரில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் நிகழ்ந்த சாலை விபத்தில் Perodua Alza காரில் பயணித்த இரு மூதாட்டிகள் உயிரிழந்தனர். அவர்களுடன் பயணம் செய்த மேலும் ஒரு ​மூதாட்டியும்,இரு முதியவர்களும், ஒரு சிறுவனும் உயிர் தப்பினர்

அவர்கள் பயணித்த Perodua Alza காரை, Hyundai MPV கார் மோதியதில் அந்த ​மூதாட்டிகள் இருவரும் சம்பவ இடத்திலேயே மாண்டனர். காரின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிக்கொண்டவர்களை மீட்பதற்கு போ​லீசார் ​தீயணைப்பு, மீட்புப்படையினரின் உதவியை நாடினர்.

Related News