இன்று காப்பார் டோல் சாவடி அருகே சுற்றுலாப் பேருந்துடன் லாரி ஒன்று மோதியதில் லாரி ஓட்டுநர் உள்ளேயே கொண்டார். அவரைக் காப்பாற்றி வெளியில் கொண்டு வரும் வரையில் ஏறத்தாழ 15 நிமிடங்களுக்கு வலியைத் தாங்கிக் கொண்டார்.
சிலாங்கூர் தீயணைப்பு - மீட்புப் படையின் செயல்பாட்டு பிரிவின் உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் கூறுகையில், அந்த இரண்டு வாகனங்களும் ஷா ஆலம் நோக்கிச் சென்று கொண்டிருக்கும்போது விபத்துக்குள்ளகின எனத் தெரிவித்தார்.
முற்பகல் 11.16 மணி அளவில் தமது தரப்புக்குத் தகவல் கிடைத்த உடன் சுங்ஙை பினாங்கு நிலையத்தில் இருந்து 6 அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அஹ்மாட் முக்லிஸ் கூறினார்.
உள்ளூர் ஆடவர் ஓட்டிச் சென்ற அந்த லாரி, சுற்றுலா பேருந்து ஒன்றின் மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்ததாக நம்பப்படுகிறது.
காயமடைந்த அந்த லாரி ஓட்டுநர் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.








