Oct 13, 2026
Thisaigal NewsYouTube

புத்ரா ஹைட்ஸ் எரிவாயு வெடி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நிவாரண நிதியைத் தொடங்கியது ஜசெக

திசைகள் செய்திப்பிரிவு
Share:
புத்ரா ஹைட்ஸ் எரிவாயு வெடி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நிவாரண நிதியைத் தொடங்கியது ஜசெக

சுபாங் ஜெயா, ஏப்ரல்.05-

கடந்த செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த எரிவாயு வெடி விபத்தில் தங்கள் வீடுகளையும், உடமைகளையும் இழந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுதற்கு, பொது மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஜசெக நிவாரண நிதி ஒன்றை தொடங்கியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ விரும்பும் மக்களின் நிதி உதவி, சம்பந்தப்பட்டவர்களுக்கு சென்றடைவதை உறுதிச் செய்வதற்கு அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த நிவாரண நிதித் திட்டத்தை ஜசெக முன்னெடுத்துள்ளதாக அதன் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

மனிதாபிமான அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தைக் குறை கூறும் நபர்கள், அறிவிலிகள் என்று அந்தோணி லோக் வர்ணித்தார்.

இந்த தீச் சம்பவம் ஒரு பேரிடராகும். இதில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவ விரும்ப வருகின்றவர்களை சிலர் குறை கூறுகின்றனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு அரசாங்கமும், தனியார் துறையும் எவ்வாறு பொறுப்பேற்றுள்ளதோ அதைப் போலவே பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வாறு உதவ முடியும் என்று ஜசெக ஆதரவார்கள் தம்மை வினவி வருவதாக அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

எனவே டிஏபி தலைமையில் இந்த நிவாரண நிதி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சரான அந்தோணி லோக் விளக்கம் அளித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →