Aug 5, 2026
Thisaigal NewsYouTube
ஆடவர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டான்
தற்போதைய செய்திகள்

ஆடவர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டான்

Share:

கோத்தாபாரு, டிச.13-


போலீசாரால் தேடப்பட்டு வந்த ஆடவன் ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். போதைப்பொருள் கடத்தல் உட்பட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டவன் என்று நம்பப்படும் 31 வயது அந்த குற்றவாளி, இன்று அதிகாலை 5.30 மணியளவில் கிளந்தான், பாசீர் பூத்தே, ஜாலான் ஜெராம் பாசு என்ற இடத்தில் சுட்டுக்கொல்லப்பட்டதாக கிளந்தான் போலீஸ் தலைவர் டத்தோ முகமட் யூசேப் மாமாட் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் 27 குற்றப்பதிவுகளையும், புதியதாக 17 குற்றப்பதிவுகளுக்காகவும், போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் 7 குற்றச்செயல்களுக்காகவும் அந்த ஆடவன் போலீசாரால் தேடப்பட்டு வந்தவன் என்று டத்தோ யூசோப் விளக்கம் அளித்தார்.

அந்த கொள்ளையனை சுட்டு வீழ்த்தியது மூலம் ஒரு செயற்கை துப்பாக்கி, ஒரு வெட்டுக்கத்தி மற்றும் கடத்தி வரப்பட்ட புகையிலை பொட்டலம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related News