Oct 7, 2026
Thisaigal NewsYouTube

5, 000 மியன்மார் அகதிகளை நாடு கடத்தத் தடை கோரி வழக்கறிஞர் மன்றம் நீதிமன்றத்தில் மனு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
5, 000 மியன்மார் அகதிகளை நாடு கடத்தத் தடை கோரி வழக்கறிஞர் மன்றம் நீதிமன்றத்தில் மனு

சுமார் 5,000 மியன்மார் அகதிகள் மற்றும் அடைக்கலம் கோரியவர்களை நாடு கடத்தும் அரசாங்கத் திட்டத்தைத் தடுத்து நிறுத்தக் கோரி மலேசிய வழக்கறிஞர் மன்றம் உயர் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளது.

இந்த நாடு கடத்தல் நடவடிக்கையை நீதிமன்றம் தமது வழக்கில் முடிவெடுக்கும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் மன்றம் கோரியுள்ளது. நாடு கடத்தப்பட்டால், அதனால் ஏற்படும் பாதிப்புகளை மீண்டும் சரிசெய்ய முடியாது என்றும் அது வாதிட்டுள்ளது.

நாடு கடத்தப்படவுள்ளவர்களில் ஐ.நா. தூதகரகத்தினால் அகதிகள் அல்லது அடைக்கலம் கோரியவர்கள் என அங்கீகரிக்கப்பட்ட ரோஹிங்யா இனத்தவர்களும் குழந்தைகளும் அடங்குவதாக வழக்கறிஞர் மன்றம் தெரிவித்துள்ளது. அவர்கள் மியன்மாருக்குத் திருப்பி அனுப்பப்பட்டால் துன்புறுத்தல் மற்றும் பிற பாதிப்புகளை எதிர்கொள்ளக்கூடும் என்றும் சுட்டிக் காட்டியுள்ளது.

எனினும், தடை உத்தரவு கோரும் மனு தற்போது முன்கூட்டியே தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்டத்துறை சார்பில் வாதிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நீதிமன்ற அனுமதி வழங்கப்படுவது குறித்து நீதிபதி நோர்லிஸா ஒத்மான் வரும் 22ஆம் தேதி முடிவெடுக்கவுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →