Dec 3, 2025
Thisaigal NewsYouTube
தேர்தல் பணியாளர்களை விசாரணை நடத்துவீர்
தற்போதைய செய்திகள்

தேர்தல் பணியாளர்களை விசாரணை நடத்துவீர்

Share:

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மற்றவர்களின் மைக்காட் அட்டையைப் பயன்படுத்தி, வாக்களிக்கப்பட்டதாக கூறப்படும் புகார் தொடர்பில் தனது தேர்தல் அதிகாரிகளை மலேசிய தேர்தல் ஆணையமான எஸ்.பி.ஆர் விசாரணை செய்ய வேண்டும் என்று தேர்தல் நடைமுறை மீதான கண்காணிப்பு அமைப்பான பெர்சே கேட்டுக்கொண்டுள்ளது.

ஒவ்வொரு வாக்காளரும், வாக்களிப்பதற்கு முன்பு அவரின் மைக்காட் அட்டையை வாங்கி பரிசோதனை செய்வதுடன், வாக்களிக்கும் நபர், அந்த மைக்காட் அட்டைக்குரியவரா? என்பதை முகத்தைப் பார்த்து உறுதி செய்தப் பின்னரே வாக்குச்சீட்டை தேர்தல் அதிகாரிகள் வழங்குகின்றனர்.

நிலைமை இவ்வாறு இருக்கும் போது, ஒருவர் மற்றவரின் அடையாளகார்டை பயன்படுத்தி வாக்களிப்பதற்கான வாய்ப்புகள் மிக குறைவு.அப்படியிருந்தும் மற்றவர்களின் மைக்காட் அட்டையைப் பயன்படுத்தி வாக்களிக்கப்பட்டுள்ளது என்றால் தேர்தல் அதிகாரிகள் மத்தியில் ஏதோ குளறுபடிகள் நிகழ்ந்துள்ளன என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது. இது குறித்து கடமையில் இருந்த தேர்தல் அதிகாரிகளிடம் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பெர்சே வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளது.

Related News