Oct 12, 2026
Thisaigal NewsYouTube

ஜண்டா பாய்க்கில் குடிநுழைவுத்துறை சோதனைகள் தீவிரப்படுத்தப்படும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஜண்டா பாய்க்கில் குடிநுழைவுத்துறை சோதனைகள் தீவிரப்படுத்தப்படும்

பகாங், , பெந்தோங், ஜண்டா பாய்க்கில் குடிநுழைவுச் சட்டங்களை மீறுவோர் மீதான அமலாக்க நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என்று குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் டத்தோ ஸாகாரியா பின் ஷாபான் தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி ஜண்டா பாய்க்கில் எட்டு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், 82 பேர் பரிசோதிக்கப்பட்டனர். அவர்களில் பல்வேறு குடிநுழைவுச் சட்ட மீறல்கள் தொடர்பாகச் சந்தேகத்தின் பேரில் 38 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

சுற்றுலா, தங்கும் விடுதிகள், விவசாயம், வணிகம் ஆகிய துறைகளில் வெளிநாட்டவர்களின் வேலைவாய்ப்புகள் சட்டவிரோத வேலைக்கு வழிவகுக்கலாம் என்று குடிநுழைவுத்துறை குறிப்பிட்டது.

சட்டவிரோதக் குடியேறிகள் மட்டுமின்றி, அவர்களை வேலைக்கு அமர்த்துவோர், தங்கவைக்க அனுமதிப்போர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டத்தோ ஸாகாரியா தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →