கோலாலம்பூர் மாநகரில் , புக்கிட் பிந்தாங் பகுதியில் உள்ள கேளிக்கை மையங்களில் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் வாடிக்கையாளர்களுக்கு உபசரணைப் பெண்களாக பணியாற்றிய 84 அந்நிய நாட்டுப் பெண்கள் கைது செய்யப்பட்டனர். இன்று அதிகாலை 1.10 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில் அந்த கேளிக்கை மையங்களின் நிர்வாகிகள், முகப்பிட பணியாளர், பணியாளர்கள் என உள்ளூரைச் சேர்ந்த ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். இந்த திடீர் சோதனை நடவடிக்கையில் 22 உபசரணைப்பணியாளர்கள், 46 தொழிலாளர்கள், 336 வாடிக்கையாளர்களிடம் போலீசார் சோதனை நடத்தியதாக போலீஸ் படைத் தலைவர் தான் ஶ்ரீ ரசாருடின் ஹுசெயின் தெரிவித்தார். வாடிக்கையாளர்களில் அறுவர் போதைப்பொருள் உட்கொண்டு இருப்பது தெரியவந்துள்ளதாக ஐ.ஜி.பி. குறிப்பிட்டார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


