Sep 7, 2026
Thisaigal NewsYouTube
மலாக்கா தேர்தல் தொகுதி பங்கீடு பேச்சு: அமிருடின்–அன்வார் சந்திப்பை உறுதிப்படுத்தினார் ஃபாஹ்மி
தற்போதைய செய்திகள்

மலாக்கா தேர்தல் தொகுதி பங்கீடு பேச்சு: அமிருடின்–அன்வார் சந்திப்பை உறுதிப்படுத்தினார் ஃபாஹ்மி

Share:

மலாக்கா மாநிலத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக பக்காத்தான் ஹராப்பானும் பாரிசான் நேஷனலும் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் இயக்குநர் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி, கூட்டணித் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமை நேற்று சந்தித்ததை தகவல் தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபாஹ்மி ஃபட்சில் உறுதிப்படுத்தியுள்ளார்.

எனினும், அந்தச் சந்திப்பில் என்ன விவாதிக்கப்பட்டது என்பது குறித்து தனக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

கடந்த ஒரு சில நாட்களாக கூட்டணித் தலைவர்கள் மத்தியில் பல சந்திப்புகளும் ஆலோசனைகளும் நடைபெற்று வருவதாகவும் ஃபஹ்மி தெரிவித்தார்.

இதனிடையே, மலாக்கா தேர்தலில் பாரிசான் நேஷனலுடன் இணைந்து செயல்படுவது குறித்து பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் குழு ஆராயும் என அன்வார் ஏற்கனவே கூறியிருந்தார். அந்தக் குழுவுக்கு பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் இயக்குநர் என்ற முறையில் அமிருடின் ஷாரி தலைமை வகிப்பதுடன், உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் செயலாளராக உள்ளார்.

மலாக்கா தேர்தலை முன்னிட்டு பாரிசான் நேஷனல் உடனான ஒத்துழைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்து வரும் நிலையில், அமிருடின்–அன்வார் சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் புதிய கவனத்தை ஈர்த்துள்ளது.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து