தெமெர்லோ, அக்டோபர்.03-
கிழக்குக் கரையோர மாநிலங்களுக்கான ரயில் இருப்புப்பாதை அமைக்கும் இசிஆர்எல் திட்டத்தில் கேபள் கம்பிகளைத் திருடியதாக இரண்டு சந்தேகப் பேர்வழிகள் கைது செய்யப்பட்டனர்.
கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி பகாங், தெமர்லோ தொழிற்பேட்டைப் பகுதியில் ரப்பர் மரத் தோட்டத்தில் உள்ளூரைச் சேர்ந்த ஒரு நபரையும், ஒரு கம்போடியா பிரஜையையும் போலீசார் கைது செய்தததாக தெமர்லோ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் நசிம் பாஹ்ரோன் தெரிவித்தார்.
இருவரையும் கைது செய்தது மூலம் கேபல் கம்பிகளைக் களவாடுவதற்கு இவர்கள் பயன்படுத்திய ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்து இருப்பதாக அவர் மேலும் கூறினார்.








