நெகிரி செம்பிலான், நீலாய் பகுதியில் தொலைத்தொடர்பு கேபிள்கள் மற்றும் உபகரணங்களைத் திருடி வந்த ஏழு கும்பல்களை போலீசார் முறியடித்துள்ளனர். இந்த நடவடிக்கையில் 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீலாய் மாவட்ட போலீஸ் தலைவர் ஜோஹாரி யாஹ்யா கூறுகையில், 17 முதல் 58 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்கள் நீலாய் கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதிகளில் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
கேங் குரோல் காப்பர்ஸ்ட்ரிப், கேங் லியோங் கேபிள், கேங் உசோப் கிளாங் மற்றும் கேங் இந்திரன் கேபள் ஐபிஜி உள்ளிட்ட கும்பல்களைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொலைத்தொடர்பு கோபுரத் தளங்களுக்குள் புகுந்து செப்பு கேபிள்கள், கேபிள் உருளைகள் மற்றும் தொலைத்தொடர்பு உதிரிப் பாகங்களைத் திருடியதுடன், நிறுவன ஊழியர்கள் எனக் கூறி அதிகாரிகளையும் ஏமாற்றியதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்தக் கும்பல்களின் நடவடிக்கையால் ஏற்பட்ட மொத்த இழப்பு 4.5 மில்லியன் ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கேபிள் உருளைகள், செப்பு மின்னல் தடுப்பு பட்டைகள், வெட்டுக் கருவிகள், கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.








