Oct 2, 2026
Thisaigal NewsYouTube

தென் தாய்லாந்து பயணங்களை ஒத்தி வைப்பீர்: மலேசியர்களுக்கு ஆலோசனை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தென் தாய்லாந்து பயணங்களை ஒத்தி வைப்பீர்: மலேசியர்களுக்கு ஆலோசனை

கோலாலம்பூர், நவம்பர்.22-

தென் தாய்லாந்து பயணங்களை ஒத்தி வைக்குமாறு மலேசியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தென் தாய்லாந்தின் பல்வேறு பகுதிகளில் கனத்த மழை மற்றும் வெள்ளம் சூழ்ந்து இருப்பதால் இப்போதைக்கு அப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்று சொங்க்லாவில் உள்ள மலேசியத் துணைத் தூதர் வலியுறுத்தியுள்ளார்.

தற்போது தென் தாய்லாந்தில் மோசமான வானிலை நிலவி வருவதாக இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் துணைத் தூதர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏற்கனவே தென் தாய்லாந்துக்குச் சென்று அங்கே விடுமுறையை கழித்துக் கொண்டு இருக்கும் மலேசியர்கள் தங்கள் பாதுகாப்பை உறுதிச் செய்து கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

உதவித் தேவைப்படக்கூடிய மலேசியர்கள், சொங்க்லாவில் உள்ள மலேசியத் தூதரக அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →