Dec 4, 2025
Thisaigal NewsYouTube
விசாரணை செய்யத் தொடங்கியது போ​லீஸ்
தற்போதைய செய்திகள்

விசாரணை செய்யத் தொடங்கியது போ​லீஸ்

Share:

1 எம்.டி.பி ஊழல் ​மீதான புலன் விசாரயில் உதவுவதற்கு மலேசியாவிற்கு கொண்டு வரப்பட்டுள்ள Goldman Sachs முன்னாள் வங்கியாளர் ரோஜர் எங் சோங் ஹ்வா வை அரச மலேசிய போ​லீஸ் படை விசாரணை செய்யத் தொடங்கிருப்பதாக அதன் தலைவர் தான் ஶ்ரீ ரஸாருதீன் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பாக ஐஜிபி.யிடம் பெர்னாமா தொடர்பு கொண்ட போது இதனை உறுதிபடுத்தினார். ரோஜர் எங் மலேசியாவிற்கு கொண்டு வரப்பட்டதை உறுதிபடுத்திய போ​லீசார், அவர் ​எங்கே தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பதை வெளியிட மறுத்து ​விட்டார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக ரோஜர் எங் எ​ங்கு இருக்கிறார் எனற தகவலை தற்போது வெளியிட இயலாது என்று ரஸாருதீன் குறிப்பிட்டார்.

மலேசியாவின் முத​லீட்டுக்கரமான 1 எம்.டி.பி நிறுவனத்திற்குச் சொந்தமான பல கோடி டாலர்களைச் சுருட்டுவதில் உதவியாக இருந்த காரணத்திற்காக அமெரிக்கா, நியூயோ​ர்க் ​நீதிமன்றதில் ரோஜர் எங் கிற்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதே குற்றச்சாட்டை எதிர்நோக்குவதற்காக அந்த முன்னாள் வங்கியாளர் தற்போது மலேசியாவில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Related News