Aug 13, 2026
Thisaigal NewsYouTube
13 மசோதாக்கள் நிறைவேற்றம்: நாடாளுமன்ற மக்களவை காலவரையறையின்றி ஒத்திவைப்பு
தற்போதைய செய்திகள்

13 மசோதாக்கள் நிறைவேற்றம்: நாடாளுமன்ற மக்களவை காலவரையறையின்றி ஒத்திவைப்பு

Share:

கோலாலம்பூர், ஜூலை.16-

கடந்த ஜூன் 22-ஆம் தேதி தொடங்கி 16 நாட்கள் நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவையின் ஐந்தாவது கூட்டத் தொடரின் இரண்டாவது கூட்டம் இன்றுடன் நிறைவடைந்து, காலவரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.

இக்கூட்டத் தொடரில் 13 முக்கிய மசோதாக்களும், பல தீர்மானங்களும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதாக மக்களவை சபாநாயகர் டான் ஸ்ரீ டாக்டர் ஜொஹாரி அப்துல் தெரிவித்தார். அவற்றில் 2026-ஆம் ஆண்டிற்கான சாலைப் போக்குவரத்து சட்டத் திருத்த மசோதா, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் திருத்த மசோதா மற்றும் சைபர் குற்றங்கள் மசோதா ஆகியவை அடங்கும்.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வரவிருக்கும் தேர்தல் பிரச்சாரக் காலங்களில் தங்களின் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும், அக்டோபர் 30-ஆம் தேதிக்குள் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு அதன் அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் சபாநாயகர் நினைவூட்டினார். அதோடு, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் வகையில், வரும் ஜூலை 25 அன்று பொதுமக்கள் மற்றும் எம்பிக்கள் பங்கேற்கும் 'நாடாளுமன்ற ஓட்டம் 2026' முதன்முறையாக நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

Related News

பிகேஆர் கட்சியின் தேசிய மாநாடு நாளை மலாக்காவில் தொடங்குகிறது / 5,000-த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளதாக அறிவிப்பு

பிகேஆர் கட்சியின் தேசிய மாநாடு நாளை மலாக்காவில் தொடங்குகிறது / 5,000-த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளதாக அறிவிப்பு

மோசமடைந்து வரும் புகைமூட்டம்: நாடெங்கிலும் 11 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலை பதிவு

மோசமடைந்து வரும் புகைமூட்டம்: நாடெங்கிலும் 11 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலை பதிவு

பண்டார் உத்தாமா பள்ளி மாணவி கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு வாதம் குறித்து நீதிமன்றம் இன்று முடிவு

பண்டார் உத்தாமா பள்ளி மாணவி கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு வாதம் குறித்து நீதிமன்றம் இன்று முடிவு

டிங்கி பாதிப்பு கடந்தாண்டு எண்ணிக்கையை முந்தியதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை

டிங்கி பாதிப்பு கடந்தாண்டு எண்ணிக்கையை முந்தியதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை

தாய்லாந்தில் 166 கிலோ ஷாபு பறிமுதல் - மலேசிய இளைஞர் கைது

தாய்லாந்தில் 166 கிலோ ஷாபு பறிமுதல் - மலேசிய இளைஞர் கைது

100 வயதை கடந்து ஆசியான் சாதனை படைத்த துன் மகாதீர், ஹாஸ்மா தம்பதி

100 வயதை கடந்து ஆசியான் சாதனை படைத்த துன் மகாதீர், ஹாஸ்மா தம்பதி