Sep 24, 2026
Thisaigal NewsYouTube
தாயாரைக் கொடுமைப்படுத்திய வீடியோ வைரல்: பாதுகாப்பு அதிகாரி கைது
தற்போதைய செய்திகள்

தாயாரைக் கொடுமைப்படுத்திய வீடியோ வைரல்: பாதுகாப்பு அதிகாரி கைது

Share:

சுங்கை பட்டாணி, ஜூலை.16-

சுங்கை பட்டாணியில் உள்ள Zakat அலுவலகத்திற்கு முன்னால், பெண் ஒருவரைப் பாதுகாவலர் ஒருவர் கொடூரமாக நடத்திய தாக்குதல் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, 30 வயது மதிக்கத்தக்க அந்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட 50 வயதுடைய அந்தப் பெண்மணி மனநலம் குன்றியவர் என்பதும், அந்தப் பாதுகாவலர், அவரின் சொந்த மகன் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்த வீடியோவில், கூர்மையான ஆயுதத்தை வைத்துக் கொண்டு அந்த ஆடவர் தாயின் தலைமுடியை இழுத்து மோட்டார் சைக்கிளில் ஏறுமாறு மிரட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து கோலா மூடா மாவட்டப் போலீஸ் தலைவர் Hanyan Ramlan கூறுகையில், வீடியோவில் காட்டியபடி உண்மையில் அங்கு வன்முறை நடந்ததா என்பதை உறுதிப்படுத்தத் தீவிர விசாரணை நடத்தப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

Related News