Dec 3, 2025
Thisaigal NewsYouTube
எரிபொருள் உதவித் திட்டம் தொகை அறிமுகம்: 4 பில்லியன் ரிங்கிட்டை மீதப்படுத்த முடியும்
தற்போதைய செய்திகள்

எரிபொருள் உதவித் திட்டம் தொகை அறிமுகம்: 4 பில்லியன் ரிங்கிட்டை மீதப்படுத்த முடியும்

Share:

ஜார்ஜ்டவுன், செப்டம்பர்.22-

நாட்டில் விரைவில் நடைமுறைக்கு வரவிருக்கும் பெட்ரோல் ரோன் 95 உதவித் தொகை ஒருங்கிணைப்புத் திட்டத்தின் மூலம் அரசாங்கம் ஆண்டுக்கு 4 பில்லியன் ரிங்கிட் வரை சேமிக்க முடியும் என்று இரண்டாவது நிதி அமைச்சர் அமீர் ஹம்ஸா அஸிஸான் நம்பிக்கை தெரிவித்தார்.

மானிய முறை திட்டத்தினால் அரசாங்கம் மீதப்படுத்தக்கூடிய தொகை 2.5 பில்லியன் ரிங்கிட் முதல் 4 பில்லியன் ரிங்கிட் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

மைகாட் அட்டையைப் பயன்படுத்திப் பெறப்படும் பெட்ரோல் ரோன்95 திட்டமானது, முழுக்க முழுக்க இலக்குக்குரிய மக்கள் பயன் அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் விளக்கினார்.

Related News