Sep 27, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் கோத்தா திங்கியில் துப்பாக்கிச் சூடு - 3 பேர் பலி
தற்போதைய செய்திகள்

ஜோகூர் கோத்தா திங்கியில் துப்பாக்கிச் சூடு - 3 பேர் பலி

Share:

ஜோகூர் மாநிலம், கோத்தா திங்கி பகுதியில் உள்ள ஓர் உணவகத்தில் நேற்று பிற்பகல் நடந்த துப்பாக்கிச்சூட்டில் மூவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தில் இரு உள்ளூர் ஆடவர்களும், ஒரு வெளிநாட்டு பெண்ணும் உயிரிழந்ததாக மாநில போலீஸ் தலைவர் அப் ரஹ்மான் அர்சாட் தெரிவித்துள்ளார்.

37 முதல் 63 வயதுள்ள அம்மூவரும், துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இத்தாக்குதலில் ஷாட்கன் வகை துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

அதேவேளையில், இந்த சம்பவம் தொடர்பாக 71 வயதுடைய ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் நடந்த இடத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் அவர் பிடிபட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related News