மலேசிய வானிலை ஆய்வு மையமான இன்று மார்ச் 28 ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, நாட்டின் வட மாநிலங்களில் வெப்பத்தின் தாக்கம், நிலை 2 உச்சத்தை தொட்டுள்ளது.
பெர்லிஸ் மாநிலம் முழுவதும், பேராக் மாநிலத்தின் உலு பேராக் மற்றும் கெடாவின் பாலிங், சிக், பெண்டாங், போக்கோக் சேனா, கோத்தா ஸ்டார் ஆகிய மாவட்டங்களில் கடும் வெப்பம் பதிவாகியுள்ளது. இப்பகுதிகளில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு வெப்பநிலை 37 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை நிலவும்.
லங்காவி, கூலிம், பினாங்கு, பேராக் தெங்கா, கிந்தா மற்றும் சரவாக்கின் லுபோக் அந்து உள்ளிட்ட பகுதிகளில் வெப்பநிலை 35 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது.
பொதுமக்கள் போதிய அளவு தண்ணீர் அருந்தவும், அவசியமின்றி வெளியில் செல்வதைத் தவிர்க்கவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.








