கோலாலம்பூர், ஆகஸ்ட்.21-
வேப் எனப்படும் மின் சிகரெட் பயன்பாட்டுப் பொருட்களுக்குத் தடை விதிக்க சுகாதார அமைச்சு இப்போதைக்கு உத்தேசிக்கவில்லை என்று அதன் அமைச்சர் டத்தோ சுல்கிஃப்லி அஹ்மாட் தெரிவித்தார்.
மின் சிகரெட்டுக்குத் தடை விதிப்பது தொடர்பாக தற்போது விரிவாக ஆராயப்பட்டு வரும் வேளையில், அந்தத் தடையை இப்போது விதிக்க அரசாங்கம் திட்டம் கொண்டிருக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டடார்.
மின் சிகரெட் மீதான தடை உடனடியாக அமல்படுத்தப்படுமானால் நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் சாத்தியம் இருப்பதால் முதலில் விரிவான ஆய்வை மேற்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று டத்தோ ஶ்ரீ சுல்கிஃப்லி விளக்கினார்.








