Oct 3, 2026
Thisaigal NewsYouTube

துருக்கியில் மலேசியாவின் முதல் பல்நோக்கு கடல்சார் கப்பல் அறிமுகம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
துருக்கியில் மலேசியாவின் முதல் பல்நோக்கு கடல்சார் கப்பல் அறிமுகம்

மலேசிய கடல்சார் அமலாக்க முகமையான எம்எம்இஏவுக்கான முதல் பல்நோக்கு கடல்சார் கப்பலான எம்பிஎம்எஸ் 1, துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள டேசான் கப்பல் தளத்தில் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.

உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் துருக்கியின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் கடற்படை அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்நிலையில், எம்பிஎம்எஸ் 1 கப்பலானது 2027 ஜனவரி மாத இறுதிக்குள் முழுமையாக தயாராகி மலேசியாவை நோக்கிப் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கப்பல் அறிமுகத்திற்கு முன்னர், பாரம்பரிய முறைப்படி, மலேசியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட கடல் நீர் அடங்கிய போத்தல் உடைக்கப்பட்டு, பின்னர் கப்பல் மர்மரா கடலில் இறக்கப்பட்டது.

இந்தக் கப்பல் மலேசியாவின் கடல்சார் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையைப் பாதுகாக்க எம்எம செயல்பாட்டுத் திறனை வலுப்படுத்தும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, சைஃபுடின் நசுத்தியோன் மற்றும் துருக்கி நாட்டின் உள்துறை அமைச்சருக்கு இடையே நடைபெற்ற இருதரப்பு சந்திப்பில் பாதுகாப்பு, கப்பல் கட்டுமானம், கடல்சார் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பப் பகிர்வு உள்ளிட்ட ஒத்துழைப்புகளை மேலும் விரிவுபடுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →