Oct 17, 2026
Thisaigal NewsYouTube

6 வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கின

திசைகள் செய்திப்பிரிவு
Share:
6 வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கின

பெட்டாலிங்ஜெயா, நவ.12-


இன்று காலையில் பெய்த கனத்த மழையில் கிள்ளான் பள்ளத்தாக்கில் பல்வேறு பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. கூட்டரசு நெடுஞ்சாலையில் கம்போங் கெரிஞ்சியில் முழங்கால் வரையில் நீரின் மட்டம் உயர்ந்ததால், வாகனமோட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். கூட்டரசு நெடுஞ்சாலை நெடுகிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதேபோன்று டாமன்சாரா ஷா ஆலாம் விரைவு சாலையிலும் நீர்பெருக்கெடுத்து ஓடியது. பெட்டாலிங் ஜெயா, பெர்சியாரான் சுரியான் டாமன்சாரா – கோத்தா டாமன்சாரா, தாமான் பெலாங்கி டாமன்சாரா சாலை, வெள்ளக்காடாக மாறியத்தில் ஐந்து வாகனத்தில் நீரில் சிக்கின.

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீரின் மட்டத்தில் வாகனங்களின் இயந்திரம் செயலிழந்த நிலையில் வாகனமோட்டிகள் காருக்குள்ளேயே சிக்கியதாக காலை 8.09 மணியளயில் தீயணைப்பு, மீட்புப்படையினர் அவசர அழைப்பைப்பெற்றதாக சிலாங்கூர் மாநில உதவி இயக்குநர் அகமட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

பெட்டாலிங் ஜெயா தீயணைப்பு, மீட்புப்படை நிலையத்திலிருந்து சம்பவ இடத்திற்கு விரைந்த எட்டு வீரர்கள், வெள்ளத்தில் சிக்கிய ஐந்து வாகனங்களின் ஒட்டுநர்கள், பாதுகாப்பாக மீட்கப்பட்டனர் என்று அவர் குறிப்பிட்டார்.

சுமார் அரை மணி நேரத்தில் நீர் வடிந்தப் பின்னர், இயந்திரய செயலிழப்பினால் நகர்த்த முடியாமல் கிடந்த ஐந்து வாகனங்களும் இழுவை வண்டியின் மூலம் அகற்றப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →