பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று சனிக்கிழமை கெடா, அலோர் ஸ்டாரில் நடத்திய ஹரிராய திறந்த இல்ல பொது உபசரிப்பில் சுமார் பத்தாயிரம் பேர் கலந்து கொண்டனர். இவ்வாண்டு ஹரிராயாவையொட்டி பிரதமர் 6 இடங்களில் நடத்தவிருக்கும் பொது உபசரிப்பின் முதலாவது நிகழ்வு இன்று அலோர் ஸ்டார், ஹோட்டல் ராஹியாவில் நடைபெற்று வருகிறது. ஹோட்டலின் வெளி வளாகத்தில் 5 பெரிய கூடாரங்கள் அமைக்கப்பட்ட மிக பிரமாண்டபமான முறையில் பிரதமரின் பொது உபசரிப்பு நடைபெற்று வருகிறது.
பல வகையான உணவுப்பொருட்கள் வருகையாளர்களுக்கு பரிமாறப்பட்ட நிலையில் அனைவரையும் நலம் விசாரித்தவாறு பிரதமர் தமது ஹரிராயா வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டது நிகழ்வில் கலந்து கொண்டவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. காலை 10.37 மணிக்கு இந்தப் பொது உபசரிப்பில் தனி நபராக கலந்து கொண்ட கெடா மாநில மந்திரி புசார் முகமட் சனூசி முகமட் நூர், மத்திய அரசாங்க அமைச்சர்களுடன் கைகொடுத்து விட்டு, பின்னர் மேன்மை தங்கிய கெடா சுல்தான் மற்றும் பிரதமர் அன்வாருடன் ஒரே மேஜையில் அமர்ந்திருந்தார்.

Related News

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

9 லட்சம் ரிங்கிட் மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்


