May 24, 2026
Thisaigal NewsYouTube
தந்தையை தாக்கி காயம் விளைவித்ததாக மகன் மீது குற்ச்சாட்டு
தற்போதைய செய்திகள்

தந்தையை தாக்கி காயம் விளைவித்ததாக மகன் மீது குற்ச்சாட்டு

Share:

பட்டர்வொர்த், ஆகஸ்ட் 07-

தனது தந்தையை இரும்புத் தடியினால் அடித்து காயம் விளைவித்ததாக ஆடவர் ஒருவர் பட்டர்வொர்த், செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

38 வயது P. ராஜ்குமார் என்ற அந்த நபர், நீதிபதி நூர் ஐனி யூசோப் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

மரணத்தை ஏற்படுத்துவதற்கான சாத்தியத்தை கொண்ட இந்த அபாயகரத் தாக்குதலை தனது 65 வயது தந்தைக்கு எதிராக ராஜ்குமார் மேற்கொண்டதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் முதல் தேதி இரவு 8 மணியளவில் பட்டர்வொர்த், தாமன் தேச முர்னி-யில் உள்ள தனது வீட்டில் ராஜ்குமார் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

ராஜ்குமாரின் தாக்குதலுக்கு ஆளான அவரின் வயதான தந்தை தலையிலும் உடலிலும் பலத்த காயங்களுக்கு ஆளாகியதாக குற்றச்சாட்டில் விவரிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 324 மற்றும் 326 ஆகிய பிரிவுகளின் கீழ் ராஜ்குமார் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News