Jul 1, 2026
Thisaigal NewsYouTube
சந்தேக நபர் மீது போலீஸ் அத்துமீறல்: அம்னெஸ்டி மலேசியா கண்டனம்
தற்போதைய செய்திகள்

சந்தேக நபர் மீது போலீஸ் அத்துமீறல்: அம்னெஸ்டி மலேசியா கண்டனம்

Share:

கெடா, கூலிமில் நேற்று நடைபெற்ற கைது நடவடிக்கையின் போது, ஒரு போலீஸ்காரர் சந்தேக நபரின் தலையில் மிதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தேவையற்ற மற்றும் 'அத்துமீறிய பலவந்தம் ' என்று அம்னெஸ்டி இன்டர்நேஷனல் மலேசியா அமைப்பு தனது கவலையைத் தெரிவித்துள்ளது.

அனைத்துலக மனித உரிமை தரத்தின்படி, போலீஸ் நடவடிக்கை சட்டப்பூர்வமாகவும், அவசியமானதாகவும், முறையானதாகவும் இருக்க வேண்டும். ஒரு நபர் போலீஸ்காரரின் பிடியில் இருக்கும் போது அவர் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும் என்று அம்னெஸ்டி வலியுறுத்தியது.

முகநூலில் வைரலாகியுள்ள 29 வினாடி வீடியோவில், மோட்டார் சைக்கிளில் இருந்து ஒருவரை கீழே தள்ளி, போலீஸ்காரர் அவர் தலையில் மிதிப்பது பதிவாகியுள்ளது.

நபர் போலீஸ் வாகனத்தை உதைத்துவிட்டு, போக்குவரத்துக்கு எதிராகத் தப்பி ஓட முயன்றதாகக் கூறப்படுகிறது. அவரிடமிருந்து 'கெத்தும்' நீர் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அவருக்கு போதைப்பொருள் சோதனையில் 'பாசிட்டிவ்' என வந்துள்ளது.

இந்தச் சம்பவம் போலீஸ் துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளதாக அம்னெஸ்டி சுட்டிக்காட்டியுள்ளது.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை