May 24, 2026
Thisaigal NewsYouTube
விசாரணை குறித்து கெம்போங் நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி
தற்போதைய செய்திகள்

விசாரணை குறித்து கெம்போங் நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி

Share:

கோலாலம்பூர்,ஆகஸ்ட் 19-

செவித்திறன் இல்லாத உடற்பேறு குறைந்த E-HAILING ஓட்டுநரைத் போலிஸ் அதிகாரி ஒருவர் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையில், மலேசிய போலிஸ் தலைவர் ரசாருதீன் ஹுசைன்-க்கு "DOUBLE JEOPARDY" என்ற கொள்கை குறித்து இருக்கும் தவறான புரிதலுக்கு கேபோங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் இன்ஜி வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஒரே குற்றத்திற்காக ஒருவர் மீது இரு முறை குற்றம் சுமத்தப்படுவது ஏற்றிக்கொள்ள முடியாத ஒன்று என்ற வழக்கறிஞர் சுரேந்திரனின் நிலைப்பாட்டையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதுமட்டுமின்றி, போலிஸ் அதிகாரிகளுக்கு மத்தியில் சட்டம் குறித்த தெளிவான புரிதல் இல்லாமல் இருப்பது நாட்டின் சட்டத்திட்டங்கள் அமலாக்கத்தை பெரும் அளவில்
பாதிக்கக்கூடும் என்று லிம் லிப் இன்ஜி சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், E-HAILING ஓட்டுநர் ஓங் இங் கியாங்-வை, தாக்கியதாகக் கூறப்படும் தெங்கு மஹ்கோட்டா ஜோகூர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம்-இன் பாதுகாப்பு போலிஸ் அதிகாரியின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டதாக நேற்று, ரசாருதீன் ஹுசைன் வெளியிட்ட தகவல் குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேவேளை, போலிஸ் அதிகாரிகளை உட்படுத்திய வழக்கு விசாரணைகளில் வெளிப்படைத்தன்மையைக் கையாளவது அவசியம் என்றும் லிம் லிப் இன்ஜி கேட்டுக் கொண்டுள்ளார்.

Related News